உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்
பொன்னூதி மலை,
ஊதியூர்,
திருப்பூர் மாவட்டம்.
தல வரலாறு:
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ளது.
18 சித்தர்களில் ஒருவரான கொங்கணசித்தர் 800 ஆண்டுகள் இங்குதான் வசித்து வந்துள்ளார்.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது உடைந்த ஒரு பாகம் இங்கும் தவறி
விழுந்ததாக கூறப்படுகின்றது! அதனால் இந்த மலை சஞ்சீவி மலை என்றும் கூறுவர். இரும்பை
பொன்னாக்கும் ரசவாதம் தெரிந்த
கொங்கண சித்தர் இங்கு பாறைகளில் ஊதி பொன் செய்ததால் ஊதியூர் மலை என்றும் தங்கமலை என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
 |
உத்தண்ட
வேலாயுதசுவாமி |
அருணகிரிநாதர் வணங்கிய திருத்தலம்! பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட மலை!
மலையில் கொங்கணச் சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட உத்தண்ட
வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. அடிவாரத்தில் பாத வினாயகர் கோவிலும்,
இடும்பன் கோவிலும் உள்ளது. அருகிலேயே அனுமந்தராய சுவாமி கோவிலும் உள்ளது.
எல்லா இடத்திலும் அனுமன் தண்டாயுத்துடன் காணப்படுவார் ஆனால் இங்கு வேல் ஆயுதத்துடன் காட்சி தருவது மிகவும் சிறப்பு! அக்காலத்தில் கொங்கணச் சித்தரால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பொன்னாலன நாணயம் பிரசாதமாக கொடுக்கப் பட்டதாம்!
தம்புரான் செட்டி கோவில்
கோவிலுக்கு மேலே சென்றால் கொங்கனச் சித்தரின் சிஷ்யரான தம்புரான் செட்டி கோவில் அவரின் ஜீவ சமாதியும் தவம் செய்த குகையும் உள்ளது!
மற்றும் வினாயகர் ராகு கேது சன்னதிகள் உள்ளது!எங்கும் இல்லாத வகையில் விநாயகர் லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி கணபதியாக அருள்பாளிக்கிறார்.
இவரை வழிபட்டால் வீட்டில் வருமை நீங்கி செல்வம் பெருகும்!
இங்கே உள்ள சுற்றுவட்டார மக்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் இவரை வணங்கிவிட்டுத்தான் தொழில் ஆரம்பிப்பார்கள்.தம்பிரன் செட்டி கோவிலுக்கு மேலே சென்றால் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.
கொங்கணச் சித்தர்
மேலே இரண்டு கி.மீ சென்றால் கொங்கனச் சித்தர் பீடம் உள்ளது. கொங்கணச் சித்தர் காட்சி தருகிறார். இங்கு பெரிய மண்டபம் இருக்கிறது. இதன் ஆரம்பத்திலேயே கிணறு போன்று பெரிய சுனை உள்ளது! அதற்கு மேலாக சென்றால் கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த குகை உள்ளது.
இதற்குள்
படுத்துக்கொண்டு தவழ்ந்துதான் செல்ல வேண்டும் மிகவும் அமைதி ததும்பும் இடம்
இங்கு சுமார் பத்துப்பேர் அமரும் அளவிற்கே குகை உள்ளது.
கூட்டம் இல்லாத
காலங்களில் அமைதியாக உட்காந்து தவம் செய்யலாம். குகையில் இருந்து வெளியே
வருவதற்கு வேறு பாதை உள்ளது இதிலும் படுத்து தவழ்ந்துதான் வெளியேற
வேண்டும்.
சொர்ன லிங்கேஸ்வரர்
இதன் உச்சியில் சிவபெருமான் சித்தருக்கு காட்சி தந்த இடம்
உள்ளது!சிவலிங்கமும் உள்ளது. இங்கு சிவன் சொர்ன லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . . ஆனால் எல்லோரும் இதனை தரிசிக்க
முடியாது ஏறுவது மிகவும் கடினம்! வெள்ளியங்கிரி மலையைப் போன்று இம்மலையும் ஏழு குன்றுகளைக் கொண்டது. வெள்ளியங்கிரி மலை உச்சியில் எப்படி மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறாரோ அதே போன்று இங்கும் சிவன் மூன்று பாறைகளுக்கு மத்தியில் காட்சி தருகிறார். அதனால் இம்மலையை சின்ன வெள்ளியங்கிரி என்றும் அழைப்பர். வெள்ளியங்கிரி மலை ஏற முடியாதவர்கள் இங்கு தரிசனம் செய்யலாம்.
இங்கு
பௌர்ணமி திதி மிகவும் முக்கியமானது. இந்த மலை பாறைகளில் உள்ள சந்திரகாந்த
கல் படிமங்கள் பௌர்ணமி இரவில் நிலா ஒளியில் பிரதிபளிக்கும் இது நம் உடலில்
படுவதன் மூலம் உடல் மன ரீதியான அனைத்து நோய்களும் நீங்கும்!
இதனால் இரவு முழுவதும் பக்தர்கள் பாறைகளில் படுத்து கிடப்பர்.
இங்கு மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
ஒருவகை மூலிகை கஷாயம் வழங்கப்படும் இது தீர்க்க முடியாத பல நோய்களையும்
தீர்க்கிறது என்று நம்பப்படுகிறது!
வீட்டிற்கு வாங்கிவர வேண்டுமானால் ஒரு லிட்டர் பாட்டிலில் தரப்படுகிறது.
சரியான படி வசதி கிடையாது வெறும் காட்டுப்பாதைதான்! ஆனால் ஏறுவதற்கு சிரமம் இருக்காது. பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் சென்று வரலாம். இம்மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளததால் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.
 |
கோவில் நுலைவாயில் |
 |
மலை அடிவாரம் |
 |
பழமையான சிதிலமடைந்த கோவில் |
 |
ஆஞ்சநேயர் சன்னதி |
 |
மலை பாதை |
 |
இடும்பர் சன்னதி |
 |
உத்தண்ட வேலாயுதர் சன்னதி |
 |
விநாயகர் சன்னதி |
 |
வேலாயுதசுவாமி கோவில் |
 |
ஸ்கந்தர் |
 |
தம்பிரான் செட்டி சித்தர் |
 |
தம்பிரான் செட்டி குகை |
 |
ராகு கேது சன்னதி |
 |
லக்ஷ்மி கணபதி |
 |
உச்சி பிள்ளையார் கோவில் |
 |
உச்சி பிள்ளையார் |
 |
உச்சி பிள்ளையார்கோவில் செல்லும் பாதை |
 |
உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து உத்தண்ட வேலாயுத சுவாமி கோவிலின் தோற்றம் |
 |
கொங்கணர் குகைக்கு செல்லும் பாதை |
 |
கொங்கணர் சுனை |
 |
கொங்கணர் தியான மடம் |
 |
கொங்கணர் தவம் செய்த குகை |
 |
சிவலிங்கம் |
 |
கொங்கணர் தவம் செய்த குகை |
 |
பொன் செய்ய பயன்படுத்திய பாறைகளில் அமைக்கப்பட்டுள்ள குழி |
 |
கொங்கணர் சன்னதி |
 |
நாகர் சன்னதி |
 |
பைரவர் |
பௌர்ணமி,அமாவாசை, கிருத்திகை, சஷ்டி போன்ற நாடுகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்!
அன்புடன்...!
Ramasamy MD Acu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஓம் நமசிவாய