அவினாசியப்பர் திருக்கோவில்,
அவினாசி, திருப்பூர்.அரிய பொருளே அவினாசி அப்பா!
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
அன்னை கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது.
தேவாரப்பதிகம்:-
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை
வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை
-சுந்தரர்.
சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனை அறிந்த சுந்தரர் இத்தலத்தில் கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகி இறைவனை பிரார்த்தனை செய்து...,
உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே
என்ற பதிகம் பாடினார் அப்போது சிவபெருமான் அருளினால் நீரில்லா குளத்தில் நீர் நிறைந்திட முதலை அதிலிருந்து வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது எட்டு வயதுப் பாலகனாக உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவதலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.
பிரம்மா 100 ஆண்டுகள் பூஜை செய்த தலம்!
இந்திரன் சாபத்தால் ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகள் இறைவனை பூஜைசெய்து சாப விமோசனம் பெற்ற தலம்!
தாடகை என்னும் பெண் பிள்ளை பேறு வேண்டி 3 ஆண்டுகள் தவம் செய்த தலம்!
நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்து முக்தி பெற்ற தலம்!
ரம்பை சாபம் நீங்க தவமிருந்து இந்திரலோகம் சென்ற தலம்!
சங்கண்ணன் என்னும் திருடன் இறைவனின் கால் சிலம்பை திருட எண்ணி அதையே நினைத்துக் கொண்டிருந்ததால் முக்தி பெற்ற தலம்!
![]() |
| பிள்ளையார் |
![]() |
| பாதிரி மரத்தம்மன் சன்னதி |
![]() |
| பாதிரி மரத்தம்மன் |
![]() |
| வீரபத்ரர் சன்னதி |
![]() |
| தலவிருச்சம் பாதிரிமரம் |
![]() |
| பழங்கால கல்தொட்டி |
![]() |
| முதலை வாயிலலிருந்து பாலகன் மீட்க்கும் காட்சி |
![]() |
| சன்னதி பின்புறம் உள்ள இந்த கோபுர துவாரம் வழியே கோபுர கலசத்தை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு |
![]() |
| தெப்பக்குளம் |
![]() |
![]() |
| பஜனை மடம் |
இத்தகைய சிறப்பு மிக்க அவினாசியப்பரை வழிபாடு செய்து எல்லா நலன்களும் பெற வேண்டிக்கொள்கிறேன்.
அடியேன்.....,
அன்புடன்....!
Ramasamy



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஓம் நமசிவாய