1.10.18

வெற்றி வேலாயுதசுவாமி கையித்தமலை

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,

கதித்தமலை ,

ஊத்துக்குளி. திருப்பூர்

கையித்தமலை,

   இறைவன் அருளால் ஒளி பொருந்திய கதிர்களை உடைய மலை. கதிர்த்தமலை அதுவே மருவி கதித்தமலை, கையித்தமலை என்று அழைக்கப்படுகிறது.
   இம்மலை மயில் வடிவில் இருப்பதால் மயூரமலை எனவும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு ஏராளமான மயில்கள் உள்ளான.
  சூரபத்மனை போரில் வெற்றி கொண்டு முருகன் இங்கு வீற்றிருப்பதால் வெற்றி வேலாயுதசுவாமி என்ற பெயரில் இங்கு அருள்பாளிக்கிறார். மூலவருக்கு பின்புறம் வள்ளி தெய்வானை அன்னையர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

ஊத்துக்குழி

   அகத்தியர் மற்றும் முருகனின் படை வீரர்களான வீரபாகு, வீரமார்த்தாண்டர், வீரபுரந்தர், வீரமகேந்திரர், வீரதீரர், வீராந்தகர், வீரகேசரி, வீரக்காதர், வீரமகேஸ்வரர். இங்குள்ள வந்து வெற்றி வேலாயுதசுவாமியை வழிபாடு செய்தனர்.அப்போது பூஜை செய்ய தண்ணீர் இன்றி தவித்து முருகனை வேண்ட தன் வேலாயுதத்தால் ஊற்று ஏற்படுத்தினார். குழியிலிருந்து ஊற்று தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி என்று அழைக்கப்பட்டது அதுவே மறுவி ஊத்துக்குழி என்று அழைக்கப்படுகிறது.
ஊத்துக்குளி வெண்ணெய் மிகவும் சுவை உடையது உலகப்புகழ் பெற்றது.
திருப்பூர் - பெருந்துறை சாலையில் இவ்வூர் உள்ளது. திருப்பூர், பெருந்துறை, ஈரோடு ஊர்களில் இருந்து பஸ்வசதி உள்ளது!
 

கையித்தமலை

கதிர்த்தமலை கோபுர தரிசனம்
விநாயகர் சன்னிதி

 வள்ளி தெய்வானை சன்னதி





























 பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிற்ப வேலைபாடு அமைந்த அற்புத கிணறு








 

கிணற்றுக்குள் அமைந்துள்ள சந்திரனை பாம்பு விழுங்கும் காட்சி



தாமறைக்கு நடுவில் அமைந்துள்ள தாமரை கோவில்

Ramasamy MD Acu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓம் நமசிவாய