22.4.19

வெள்ளியங்கிரி மலை


 வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்,

வெள்ளியங்கிரி மலை;-

பூண்டி,

கோயமுத்தூர்


  வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மலைத்தொடர். தென்கயிலை என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது.







ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில்


வெள்ளை விநாயகர் கோயில்,

பாம்பாட்டி சுனை,

கைதட்டி சுனை,

சீதைவனம்,

அர்ச்சுனன் வில்,

பீமன் களி உருண்டை,


  போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். மலை ஏறுவோர் உணவு, தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும் மேலே கடைகள் வசதி கிடையாது. மாங்காய், மோர் லெமன் ஜூஸ் போன்ற சில உணவுப் பொருட்கள் சில இடங்களில் கிடைக்கும் ஆனால் விலை மிகவும் அதிகம்.
நடை பயணம் பாதுகாப்பிற்காக மூங்கில் தடி வாங்கிச் செல்ல வேண்டும்(ரூ30).
கோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. பிளாஸ்டிக் பைகள் எடுத்துதுச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை.
  பிப்ரவரி முதல் மேமாதம் முடிய நான்கு மாதங்கள் மட்டுமே மலைஏற அனுமதி.
பனிப்பொழிவு,மழை,மிருகங்கள் நடமாட்டம் ஆகிய காரணங்களால் மற்ற நாட்களில் மலைஏற அனுமதி இல்லை. மகாசிவராத்திரி சித்திரை பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைஏறுவர்.
மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மையார் காட்சி தருகின்றனர். 
வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மை திருக்கோவில்
பஞ்சமுக விநாயகர்

ஒரே கல்லில் அமைந்துள்ள நவகிரகம் மற்றும் பனிரெண்டு ராசிகள் உள்ள அதிசய தூபி

மலை பாதை தொடக்கம்

வெள்ளை விநாயகர் கோவில்
மலை பாதை


கைதட்டி சுனை


பாம்பாட்டி சித்தர் சுனை

புறா சித்தர்





பீமன் களி உருண்டை,


சீதைவனம்













படர்வதற்கு இடம் கொடுத்த மரத்தையே வீழ்த்திய ராட்சத கொடி
வெள்ளியங்கிரி ஆண்டவர்

வெள்ளியங்கிரி ஆண்டவர்

ஆண்டி சுனை

அன்புடன்...!
Ramasamy MD Acu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓம் நமசிவாய