22.4.19

வெள்ளியங்கிரி மலை


 வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்,

வெள்ளியங்கிரி மலை;-

பூண்டி,

கோயமுத்தூர்


  வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மலைத்தொடர். தென்கயிலை என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது.




20.2.19

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்

பொன்னூதி மலை,

ஊதியூர்,

திருப்பூர் மாவட்டம்.


தல வரலாறு:

     பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் திருப்பூர் மாவட்டம்  காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணசித்தர் 800 ஆண்டுகள் இங்குதான் வசித்து வந்துள்ளார். அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது உடைந்த ஒரு பாகம் இங்கும் தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது! அதனால் இந்த மலை சஞ்சீவி மலை என்றும் கூறுவர். இரும்பை பொன்னாக்கும் ரசவாதம் தெரிந்த
கொங்கண சித்தர் இங்கு பாறைகளில் ஊதி பொன் செய்ததால் ஊதியூர் மலை என்றும் தங்கமலை என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உத்தண்ட வேலாயுதசுவாமி

3.10.18

அவினாசியப்பர் திருக்கோவில்

 அவினாசியப்பர் திருக்கோவில்,

அவினாசி, திருப்பூர்.

அரிய பொருளே அவினாசி அப்பா!


   தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
அன்னை கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது.

தேவாரப்பதிகம்:-
    
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை 
வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.
-சுந்தரர்.

    சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

1.10.18

வெற்றி வேலாயுதசுவாமி கையித்தமலை

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,

கதித்தமலை ,

ஊத்துக்குளி. திருப்பூர்

கையித்தமலை,

   இறைவன் அருளால் ஒளி பொருந்திய கதிர்களை உடைய மலை. கதிர்த்தமலை அதுவே மருவி கதித்தமலை, கையித்தமலை என்று அழைக்கப்படுகிறது.
   இம்மலை மயில் வடிவில் இருப்பதால் மயூரமலை எனவும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு ஏராளமான மயில்கள் உள்ளான.
  சூரபத்மனை போரில் வெற்றி கொண்டு முருகன் இங்கு வீற்றிருப்பதால் வெற்றி வேலாயுதசுவாமி என்ற பெயரில் இங்கு அருள்பாளிக்கிறார். மூலவருக்கு பின்புறம் வள்ளி தெய்வானை அன்னையர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

ஊத்துக்குழி

   அகத்தியர் மற்றும் முருகனின் படை வீரர்களான வீரபாகு, வீரமார்த்தாண்டர், வீரபுரந்தர், வீரமகேந்திரர், வீரதீரர், வீராந்தகர், வீரகேசரி, வீரக்காதர், வீரமகேஸ்வரர். இங்குள்ள வந்து வெற்றி வேலாயுதசுவாமியை வழிபாடு செய்தனர்.அப்போது பூஜை செய்ய தண்ணீர் இன்றி தவித்து முருகனை வேண்ட தன் வேலாயுதத்தால் ஊற்று ஏற்படுத்தினார். குழியிலிருந்து ஊற்று தோன்றியதால் இவ்வூர் ஊற்றுக்குழி என்று அழைக்கப்பட்டது அதுவே மறுவி ஊத்துக்குழி என்று அழைக்கப்படுகிறது.
ஊத்துக்குளி வெண்ணெய் மிகவும் சுவை உடையது உலகப்புகழ் பெற்றது.
திருப்பூர் - பெருந்துறை சாலையில் இவ்வூர் உள்ளது. திருப்பூர், பெருந்துறை, ஈரோடு ஊர்களில் இருந்து பஸ்வசதி உள்ளது!
 

கையித்தமலை

23.8.18

சென்னிமலை ஆண்டவர்

சென்னிமலை சுப்ரமண்யசுவாமி

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்!
தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே 'கந்த சஷ்டி கவசம்' என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்!
இங்கு உள்ள குகை பழனிவரை செல்கிறதாம்!
இங்கு முருகன் பால முருகனாக காட்சி தருகிறார்.
இங்கு வள்ளி தெய்வானைக்கு தனி சன்னதி உள்ளது. தேவியர் இருவரும் பூர்வ ஜென்ம அவதாரமான அமிர்தவள்ளி சுந்தரவள்ளியாக அருள் பாளிக்கின்றனர்.
குரங்குகள் மயில்கள் பறவைகள் பசுமை மரங்கள் சூழ இயற்கை அழகுடன் காட்சி தருகிறது! மலைக்கு மேலே செல்ல பஸ்வசதி உள்ளது.