22.8.18

சிவன் மலை

சிவன் மலை ஆண்டவர்

  பெயர்தான் சிவன் மலை ஆனால் இங்கு முருகர் தான் இருக்கிறார்.
இந்த கோவிலில் "உத்தரவு பெட்டி" என்று ஒரு பெட்டி இருக்கிறது இந்த பெட்டியில் எந்த பொருளை வைக்கிறார்களோ அந்த பொருளால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமாம்!
இந்த பெட்டியில் கலசத்தில் நீர் வைத்த போதுதான் சுனாமி வந்ததாம்!
மஞ்சள் வைத்தபோது அதன் பிறகு மஞ்சள் விலை பலமடங்கு அதிகரித்ததாம்!
ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்த போதுதான் ஐநூறு ஆயிரம் ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்ததாம்!
 உத்தரவு பெட்டியில் வைக்கவேண்டிய பொருளை இறைவன் தனது பக்தர்களின் கனவில்வந்து கூறுவார். அதை கோவில் நிர்வாகத்தில் தெரிவித்தால் பக்தர் சொல்வது உண்மைதானா என்று அறிய இறைவன் பாதத்தில் பூ வைத்துப் பார்த்து இறைவன் உத்தரவு கொடுத்தால் அது உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். பிறகு அடுத்த உத்தரவு வரும்வரை அந்தப்பொருள் அந்தப் பெட்டியில் இருக்கும்.
இக்கோயில் திருப்பூர் to காங்கயம் சாலையில் உள்ளது. திருப்பூரில் இருந்தும் காங்கயத்தில் இருந்தும் நிறைய டவுன்பஸ் வசதி உள்ளது. இருபது நிமிடத்தில் கோவிலுக்கு சென்றுவிடலாம். மலைமீது ஏறவும் பஸ் வசதி உள்ளது. ஆனால் படிக்கட்டு பாதையில் நடந்து செல்வதே மிகவும் சிறப்பு.

சிவன்மலை அடிவாரம்



பாத விநாயகர்





மலை பாதை
உச்சி விநாயகர்

கோயில் கோபுரம்





பழங்கால தேரின் கலைநயம் மிக்க  சிற்பங்கள்






சிவன்மலை
ஆண்டவர் உத்தரவு பெட்டி

Ramasamy MD Acu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓம் நமசிவாய